Friday, January 16, 2015

சோதனைகள்

Scripture வேதவசனம்:  லூக்கா 17:1 பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

Observation கவனித்தல்: இந்த உலகத்தில் பாவ சோதனைகள் இல்லாமல் வாழ்வது இயலாதது. நம்மைச் சுற்றிலும் சோதனைகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் சோதனைகள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதை விட பெரியவராக நமக்குள் இருக்கிறவர் இருக்கிறார்.
 
Application பயன்பாடு: சோதனைகளை மேற்கொள்வதற்கான வழி என்பது சோதனைகளே இல்லாத இடத்தில் வாழ்வது அல்ல (அப்படி ஒரு இடம் இந்த உலகத்தில் இல்லை என்றே நான் நம்புகிறேன்). மாறாக ஜெயம்பெற்றவரை ஆண்டவராகக் கொண்டிருப்பதே ஆகும். இயேசு ஏற்கனவே அனைத்து சோதனைகளையும் எதிர்கொண்டு அவைகளை ஜெயித்திருக்கிறார்.  என் சோதனைகளில் அவருடைய வெற்றியை என்னில் நிலைநிறுத்துகிறார். 
 
Prayer ஜெபம்: இயேசுவே, நீர் வெற்றி சிறந்தவர், மாபெரும் வெற்றியாளர். உம் வெற்றியில் நான் வாழ எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment