Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 3:4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

Observation கவனித்தல்: ஊழியத்தில் பணம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆனாலும் பணமின்மை ஒருபோதும் ஊழியம் செய்வதை நிறுத்துவதற்கு காரணமாக இருக்காது. இயேசு சபைக்கு விட்டுச் சென்ற ஊழியமானது பணத்தின் வல்லமையில் செயல்படாமல் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் அடிப்படையில் செயல்பட்டது.
Application பயன்பாடு: தேவன் எனக்கு அருளுகிற பணத்தை நான் எவ்வாறு செலவிடுகிறேன் என்பதற்கு நான் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். அப்படியானால் அவர் எனக்கு அருளியிருக்கிற பரிசுத்த ஆவியானவரைப் பற்றி கணக்கு ஒப்புவிக்க நான் எவ்வளவு அதிகம் பொறுப்புள்ளவனாக இருகக் வேண்டும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என் மூலமாக நீர் வெளிப்படுவதை நான் அனேக நேரங்களில் தடுத்திருக்கிறேன், அதற்காக என்னை மன்னியும். நீர் வெளிப்பட விரும்புகிற பயனுள்ள பாத்திரமாக என்னைக் கண்டுகொள்வீராக. நீர் விரும்புகிறபடி இன்று என்னை பயன்படுத்தும். ஆமென்.
No comments:
Post a Comment