Wednesday, January 7, 2015

ஆபத்து வேளைகளில்

Scripture வேதவசனம்:   சங்கீதம் 3:1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) 3. ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 4. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

Observation கவனித்தல்: தேவனை நம்புவது மதியீனமானது என்று நம்பும்படி தாவீதின் எதிர்கள் முயற்சி செய்வதைக் குறித்து அவர் கேள்விப்பட்டார். அவர்களைப் பொறுத்டஹ்வரையில், ட்ஏவன் தாவீதுக்கு உதவி செய்ய மாட்டார். தாவீது தனியாக தன் எதிரிகளைச் சந்திகக் வேண்டும். ஆகவே தாவீது என்ன செய்தார்? தன் எதிரிகள் சொல்வதை அவர் தேவனிடம் சொல்கிறார். தேஅனிடமான தன் விசுவாசத்தை அறிக்கை செய்கிறார். தேவன் தாவீதை பாதுகாக்க மட்டுமல்ல அவரைச் சுற்றிலும் அரணாக இருப்பதாகச் சொல்கிறார். தேவன் தாவீதுக்கு தன் தயையைக் காண்பிக்கிறார். அவனைச் சுற்றிலும் இருந்த பிரச்சனைகளில் இருந்து மேலே உள்ள ஆசீர்வாதங்களுக்கு நேராக உயர்த்துகிறார். 
 
Application பயன்பாடு: தேவன் தாமே என்னைச் சுற்றிலும் அரணாக இருக்கிறார். அவர் என்னிடம் தயையுள்ளவராக இருக்கிறார். நான் என் பிரச்சனைகளைப் பார்ப்பதை விட்டு எனக்கு மேலே உள்ள ஆசீர்வாதங்களைக் காணப் பண்ணுகிறார்.   
 
Prayer ஜெபம்: பரம பிதாவே, நான் உம் பிள்ளையாக இருப்பதற்கு கொடுத்து வைத்தவன். ஆபத்து வேளைகளில் நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் எனக்கு பதில் சொல்வீர். ஆமென்.

No comments:

Post a Comment