Wednesday, January 28, 2015

தேவனுக்கே மகிமை

Scripture வேதவசனம்: கேள்வி: அப்போஸ்தலர் 4:7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.

பதில்: அப்போஸ்தலர் 4:10. உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.

Observation கவனித்தல்: அந்த மனிதன் நன்கறியப்பட்டவன். பலவருடங்களாக தேவாலயத்தில் வாசலில் சப்பாணியாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது அந்த மனிதன் நடக்கிறவனாக, சுகம்பெற்று தேவனை மகிமைப்படுத்தவனாக இருந்தான். விவரிக்க முடியாத ஏதோ ஒன்று அவனுக்கு நடந்திருக்கிறது என்பது அனைவரும் காணக்கூடியதாக இருந்தது. பேதுருவும் யோவானும் இயேசுவின் ஊழியத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.
 
Application பயன்பாடு:   இயேசுவின் ஆவி தங்கி வாழும், அவரைப் பின்பற்றுபவனாக இருக்கும் நான் என் மூலமாக தேவன் இந்த் உலகத்தால் விளக்கம் கொடுக்க முடியாத ஒரு செயலைச் செய்யும் போது நான் ஆச்சரியப்படக் கூடாது. நான் விசுவாசத்தில் செயல்படும்போது அப்படிப்பட்டவைகள் நடக்கிறது. அப்படிப்பட்ட செயல்கள் மூலமாக தேவன் மற்றவர்களை நேசிப்பதை வெளிப்படுத்துகிறார். அது தேவன் மட்டுமே மகிமை அடைகிற ஒரு செயலாக இருக்கும்.
 
Prayer ஜெபம்:  இயேசுவே, நீர் உம் மக்களை அசாதாரணமான விதத்தில் பயன்படுத்த ஆயத்தமாக இருக்கிறீர் என்பதை நான் நம்புகிறேன். எங்கள் பங்கு சிறியதும் முக்கியமற்றதாக இருந்தாலும், அது உம்மாலே மட்டுமே செய்யப்படக் கூடியதை வெளிப்படுத்தும். உமக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

No comments:

Post a Comment