Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 10:19 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
Observation கவனித்தல்: இயேசு அவர்களோடு நடந்து திரிந்து பேசியிருக்கிறார். அவர் பரலோகத்திற்குப் போன போது, அவர்களுடனே வாசம் செய்யும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் பேதுருவிடம் தெளிவாக பேசுகிறார். பேதுரு ஆவியானவரின் குரலை அடையாளம் கண்டு அவரின் செய்தியை உணர்ந்து கொண்டார்.
Application பயன்பாடு: என் மனதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கைகளின் அடிப்படையில் பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசுவதன் மூலமாக தேவன் என்னுடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். நான் கீழ்ப்படியாவிடில் தேவனை இழந்துவிடுவேன் என்பதை மிக உறுதியாக உணர்ந்திருக்கிறேன். தேவைப்படும்போது, திரும்பவும் அவருடைய வழிநடத்துதலை வேறு எவ்விதத்திலாவது தருமாறு கேட்பேன். ஒருவேலை ஆவியானவரின் வார்த்தைகளை என்னால் சேமித்து வைக்க முடியாதெனினும், அவை தேவனுடைய வார்த்தைக்கு எதிராக ஒருநாளும் இருக்காது. நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதிலும் அடையாளம் கண்டு கீழ்ப்படிவதிலும் வளரும்போது, நான் சீக்கிரமாக அவர் குரலுக்கு செவிமடுக்க முடியும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னுள் வசிப்பீர் எனில், என்னுடன் பேச விரும்புவீர் என்பது எவ்வளவு வெளிப்படையான உண்மை.அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து என்னுடன் பேசும், நானும் தொடர்ந்து உமக்குக் கீழ்ப்படிவேன். ஆமென்.
No comments:
Post a Comment