Wednesday, February 4, 2015

ஆவியானவர் பேசுகிறார்

Scriptureவேதவசனம்: அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்.

Observation கவனித்தல்: இயேசு சொன்னதைக் கேட்டு அதன்படியே பேதுரு செய்தார். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது பேசுகிறார். அவர் இயேசுவின் செய்தியை புரிந்துகொண்டது போலவே பேதுரு பரிசுத்த ஆவியானவர் பேசுவதையும் பேதுரு புரிந்து கொண்டார். இயேசு சொன்னபடி செய்தது போலவே, இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியானவர் சொன்னதையும் செய்தார்.   
 
Application பயன்பாடு: இயேசுவுடன் நடந்து பேசியது போலவே, பரிசுத்த ஆவியானவருடன் கூட  நடந்து வந்தனர். அதே பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வசிக்கிறார். நானும் அதே போல ஒரு உறவை எதிர்பார்க்க முடியும். நானும் பரிசுத்த ஆவியானவருடன் நடந்து உரையாட முடியும். 
 
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இயேசுவான் எனக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற பொக்கிஷம் நீர். நீர் எனக்கு விலையேறப்பெற்றவர். ஆதிச்சபையுடன் நீர் பகிர்ந்து கொண்ட அதே உறவை என்னுடனும் கிரியை செய்யும். ஆமேன்.

No comments:

Post a Comment