Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 16:40 அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு
லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப்
போய்விட்டார்கள்.
Observation கவனித்தல்: இந்த வசனத்தில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், சிறைச்சாலையில் இருந்து அப்பொழுதுதான் விடுவிக்கப்பட்ட நபர் ஆறுதல் சொல்லுகிறவராக இருக்கிறார். அவர்கள் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டதோடு அல்லாமல், அவர்கள் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டும் இருந்தது. அவர்கள் ஒரு பூமி அதிர்ச்சியினால் விடுவிக்கப்பட்டார்கள். சிறை அதிகாரி அவர்கள் காயங்களைக் கழுவினான். அவர்கள் சிறை அதிகாரி மற்றும் அவனுடைய குடும்பத்தினருக்கு ஞானஸ்நானம் கொடுத்த பின் அவர்கள் விசுவாசிகளானார்கள். அவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டபின் நகரத்திற்குச் செல்கையில் லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் தங்கள் காயத்தைக் காண்பிக்கவோ அல்லது தங்கள் பாடுகளைச் சொல்லி பரிதாபத்தைச் சம்பாதிக்கவோ நினைக்கவில்லை. லீதியாளின் வீட்டில் கூடியிருந்தவர்களிடம் இருந்து மன ஊக்கத்தை எதிர்பார்க்கவில்லை. மாறாக அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
Application பயன்பாடு: நாம் படும் பாடுகள் மீது கவனம் வைப்பதை விட மற்றவர்கள் மீது நம் கவனத்தை தேவன் வைக்கிறார். நாம் உண்மையுடன் நோக்கிப்பார்த்தோமானால், உதவி தேவைப்படும் ஒருவரை பரிசுத்த ஆவியானவர் நமக்கு காண்பிப்பார்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக இருக்கும்படி, என் கவனம் எப்பொழுதும் உம் மீதே இருக்கும்படி எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment