Scripture வேதவசனம்: மத்தேயு 22:15 அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,
16. தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள்
வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச்
சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால்
எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் (அக்கறையில்லையென்றும்)
அறிந்திருக்கிறோம். 17. ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
Observation கவனித்தல்: இயேசுவின் தன்மை, நேர்மை, உண்மை மற்றும் மக்களுக்கு முன்பாக வளைந்து கொடுக்காத தன்மை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் சிறந்த சாட்சியாக இவ்வசனம் இருக்கிறதல்லவா! ஆனால் அவர்கள் அவரைப் பற்றிச் சொன்னவைகள் வெறும் வாய்ப்பேச்சு மாத்திரமே. அவ்வார்த்தைகளுக்கு அவ்ர்கள் ஒரு நாளில் பதில் கொடுக்க வேண்டும். அவர்கள் சொன்னவைகளை நம்பி இருப்பார்கள் எனில், அவர்கள் அவர் சொன்னவைகளுக்கு செவிமடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமல்லவா, ஏன் செய்ய வில்லை
Application பயன்பாடு:
நான் தேவனை துதித்து அவருடைய ஞானம் மற்றும் உண்மையைப் பற்றிப் பேசும்போது, நான் அவர் சொல்பவைகளைப் புறந்தள்ளி, என் சொந்த ஞானத்தை நம்புகிறேனா? நான் அவரை ஆண்டவர் என்றுச் சொல்லி, அவருடைய வார்த்தை எனக்குத் தேவை இல்லாதது போல நான் வாழ்கிறேனா? நான் ஆராதனையில் ஆண்டவரைப் பற்றி பாடுகிற பாடல்களுக்கு செவிகொடுத்துக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. நான் பாடுகிற பாடல்களுக்கு தக்கவாறு வாழ்கிறேனா?
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் ஆராதனையில் பாடுகிற பாடல் வரிகளை எனக்கு நினைவுபடுத்தும். விசேஷமாக, நான் அவை உண்மை அல்ல என்பது போல வாழும்போது அதிகமாக நினைவுபடுத்தும்.
No comments:
Post a Comment