Scripture வேதவசனம்: மத்தேயு 24:42 42. உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால்,
அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
Observation கவனித்தல்: ஒரு முறை நான் ஞாயிறு ஓய்வு நாள் பள்ளியில் போதித்துக் கொண்டிருந்த போது, இயேசு எப்பொழுது வருவார் என்று நினைக்கிறீர்கள் என குழந்தைகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்தைச் சொன்னார்கள். ஏன் அந்த வருடத்தை நீங்கள் ட்ஏர்வு செய்தீர்கள் எனக் கேட்ட போது, அவர்கள் அதற்குள் தாங்கள் படித்து முடிக்க வேண்டும், அல்லது இன்னின்ன சாதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் வசதிக்கேற்ப இயேசுவின் வருகையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தனர்.
Application பயன்பாடு: நாம் நினைக்கும் நேரத்தில் அல்லது நமக்கு வசதியான நேரத்தில், அல்லது நாம் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு விரும்புகிற நேரத்தில் இயேசு வரமாட்டார். நான் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆயத்தமாக வாழ வேண்டும். மத்தேயு 24 ஐ வாசிக்கையில், அவருடைய வருகைக்கான சரியான நேரம் ஒருவேளை இன்றைய நாளாகக் கூட இருக்கலாம்.
Prayerஜெபம்: இயேசுவே, நீர் பூமிக்கு மறுபடியும் திரும்ப வரப்போகிறீர் என விசுவாசிக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே வாரும் (வெளி.22:20)/ ஆமென்.
No comments:
Post a Comment