Scripture வேதவசனம்: 2 கொரிந்தியர் 5:8,9 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
Observation கவனித்தல்: நாம் முக்கிய்னமானது எது என்பதை நிர்ணயம் செய்யாவிடில், இந்த உலகத்தில் இருந்து “முக்கியமானது” என் தீர்மானிக்கத் தூண்டும் அனேக அழுத்தங்கள் உண்டாகும். நம் வாழ்க்கைக்கு முக்கியமான காரியங்களை நாம் நிர்ணயம் செய்யும் வரையில், அனுதின வாழ்வின் அழுத்தங்களினிமித்தம் “முக்கியமான காரியம்” மாறிக்கொண்டே இருக்கும்.
பவுலைப் பொறுத்தவரையில், தேவனைப் பிரியப்படுத்துவது மாத்திரமல்ல, மனமகிழ்ச்சியோடு அவரைப் பிரியப்படுத்துவது அவருக்கு முக்கியமானதாக இருந்தது.
Application பயன்பாடு: நான் எப்படி தேவனைப் பிரியப்படுத்துகிறேன் என்பது என்னை சுற்றிலும் இருப்பவர்களுக்கு சாட்சியாக இருக்கிறது, தேவனைச் சேவிப்பது என்பது மிகவும் கடினமான பாரம் என்பது போல நான் காண்பித்தால், தேவன் ஒரு கடுமையான எஜமானர் ஏனினில் அவர் என் கரத்தை முறுக்குவதால் நான் அவருக்காக உழைக்கிறேன் எனப்து போல உலகத்திற்குத் தெரியும். மன மகிழ்ச்சியுடன் நாம் அவரை சேவிப்பது என் பாக்கியம், நான் அதை மிகவும் கனத்திற்குறியதாக கருதுகிறேன், நான் அவருக்குப் பிரியமானதாக இருக்க விரும்புகிறேன் என்ற செய்தியை இந்த உலகத்திற்கு காண்பிக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவேம் உம் பிள்ளையாக இருப்பதை நான் மிகவும் கனத்திற்கும் ஆசீர்வாததிற்கும் உரியதாக கருதுகிறேன் என்பதை நீர் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.உம்மை பிரியப்படுத்துவதே எனக்கு முக்கியமான காரியம். ஆமென்.
No comments:
Post a Comment