Tuesday, November 17, 2015

கொடுப்பவர்களுக்காக

For Givers
Scripture வேதவசனம்: 2 கொரிந்தியர் 9:7  அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
 
Observation கவனித்தல்: நான் ஒரு கிறிஸ்தவ வானொலி நிலைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டிருந்தேன். நான் போகும் வழியில் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியான ஒரு சிந்தனையைத் தரும்படி ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்.  என் இதயத்தில் உடனே ஆண்டவர் பேசுவதை உணர்ந்தேன், “நான் மன்னிக்கிறவர் மட்டுமல்ல, மனம் திறந்து கொடுப்பவர்களுக்காகவும் இருக்கிறேன்.” மேற்கண்ட வசனமானது கடவுள் மன்னிக்கிறவர் மட்டுமல்ல, மனதாரக் கொடுப்பவர்களை நேசிக்கிறவராகவும் இருக்கிறார் என காண்கிறோம்.
 
Application பயன்பாடு: தேவனுடைய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நான் விரும்புகிறேன். நான் எப்படி தேவனை பிரியப்படுத்தமுடியும் என்ற கருத்தை அவை எனக்குத் தருகின்றன. 

Prayer ஜெபம்:  பரமப் பிதாவே,   உலகில் மாபெரும் கொடையாளராக இருப்பதற்கான பரிசை நீர் பெறுகிறீர்.  உம் கொடுக்கும் தன்மை என் மூலமாக வெளிப்படுகிறது, வெளிப்படவேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

No comments:

Post a Comment