Scripture வேதவசனம்: மத்தேயு 4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில்
உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு
உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
Observation கவனித்தல்: இந்த வசனமானது இயேசுவின் ஊழியமுறையின் அடிப்ப்டையை உள்ளடக்கி இருக்கிறது. முதல் பகுதியானது, ராஜ்ஜியத்தைக் குறித்து உபதேசிப்பதும் பிரசங்கிப்பதும் ஆகும். ராஜ்ஜியம் என்பது ராஜாவுடனான அதிகார அமைப்பு ஆகும். அனுதின வாழ்வில் இருந்து உவமைகளை சொன்னதன் மூலமாக தேவ ராஜ்ஜியம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயேசு உதவினார். இரண்டாவது பகுதி, அந்த அதிகாரத்தை வெளிப்படுத்துவது ஆகும். அவர் இஸ்ரவேலுக்காக ஒரு உலகப் பிரகாரமான அரசாங்கத்தை அமைப்பது அவர் நோக்கமாக இராதபடியால், அவர் அந்த அதிகாரத்தை சுகமாக்குதல், பிசாசுகளைத் துரத்துதல் மற்றும் அற்புதங்கள் மூலமாக வெளிப்படுத்தினார். அவர்களுடைய வாழ்வில் பரலோக ராஜ்ஜியத்தின் அதிகாரம் பெருத்த மாற்றத்தை உண்டாக்கியது.
Application பயன்பாடு : அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் காணப்படும் சபையானது இதே மாதிரியைப் பின்பற்றி இருப்பதைக் காண்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இன்று சபை கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. நாம் ஆதி திருச்சபை பின்பற்றின இயேசுவின் மாதிரியை பயன்படுத்த வேண்டும் என நான் கருதுகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் ராஜ்ஜியத்தின் அதிகாரத்தை வெளிப்படுத்தி பிரசங்கிக்க எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment