Scriptureவேதவசனம்: ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை
உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்
பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும்
சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
Observation கவனித்தல்: மனிதர்கள் தெய்வங்களை உண்டாக்கிய போது, அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு அனேக மனித தன்மைகளைக் கொடுத்தார்கள். அவர்களின் மனித வடிவிலான தெய்வங்கள் மனிதனைப் போல முகம் மற்றும் சரீரங்களை உடையனவாக இருந்தன. அனேக வேளைகளில் இத்தெய்வங்கள் மனிதன் பெற விரும்புகிற விசேஷ வல்லமை உடையனவாக இருந்தன.
சாத்தான் சத்தியத்தைப் புரட்ட விரும்புகிறான். தெய்வங்கள் மனிதனின் சாயலில் உண்டாக்கப்படுவதற்கு பதிலாக, மனிதன் கடவுளின் சாயல் மற்றும் தன்மையில் உருவாக்கப்பட்டதே சத்தியமாக இருக்கிறது. தெய்வங்கள் மனிதனின் சாயலுக்கு ஒத்திருப்பதற்குப் பதிலாக, மனிதன் உண்மையான கடவுளின் சாயலுக்கு ஒப்பாக இருக்கிறான் என்பதே உண்மை ஆகும்.
Application பயன்பாடு: நான் கீழே காசு கிடப்பதைப் பார்க்கும்போதெல்லாம், அதை எடுப்பேன். அதற்கு அதிக மதிப்ப்பில்லை என்பதினால் நான் எளிதாக அதைக் கடந்து சென்று விட இயலும். ஆனால் அதில் நான்கு முக்கியமான வார்த்தைகள் உள்ளது: In God We
Trust - கடவுளின் எங்கள் நம்பிக்கை இருக்கிறது. மிகவும் அழுக்கான இடத்திலிருந்தும் கூட நான் அக்காசுகளை எடுப்பதற்கு இவ்வார்த்தைகள் மிகவும் மதிப்புள்ளதாக இருக்கிறது.
அப்படியெனில் நான் எவ்வளவு அதிகமாக தாயின் கருவில் இருக்கும் குழந்தையைக் கவனிக்க வேண்டும்: அது தேவனுடைய சாயல் மற்றும் தன்மையை உடையதாக இருக்கிறதல்லவா! எவ்வளவு அதிகமாக நான் ஏழைகளைக் குறித்துக் கரிசனை உள்ளவனாக இருக்க வேண்டும்: அவர்கள் என் தேவனின் சாயலை சுமக்கிறார்களே! எவ்வளவு அதிகமாக நான் வருத்தப்பட்டு நொந்து போயிருப்பவர்களைக் குறித்து அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டும். அவர்கள் தேவனுடைய சாயலைச் சுமந்து திரிகிறார்களே!
Prayer ஜெபம்: பரம தந்தையே, இந்த ஆண்டு நான் என்னைச் சுற்றி இருக்கும் அனைத்திலும், உம் சுபாவம் மற்றும் செயல்களை வெளிப்படுத்தாதவர்களிடமும் கூட, உம் சாயலின் மற்றும் தன்மையின் மதிப்பைக் கண்டுகொள்வதில் உற்சாகமாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment