Wednesday, January 6, 2016

காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட வரலாறு போன்றது




Scripture வேதவசனம்: லூக்கா 2:11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

Observation கவனித்தல்: இஸ்ரவேலர்கள் ரோம ஆட்சியிலிருந்து விடுதலை பெற காத்துக் கொண்டிருந்தார்கள். தூதர்களால் அறிவிக்கப்பட்ட நற்செய்தி என்னவெனில், இரட்சகள் இப்பொழுது உலகிற்கு வந்திருக்கிறார் என்பதே. ஆனால் அந்த இரட்சகர் ஒரு குழந்தையாக இருந்தார். குழந்தை வளருமளவுக்கும் விடுதலைக்குக் காத்திருக்க வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை. 

Application பயன்பாடு: நான் புரிந்து கொள்ளாத விதத்திலேயே தேவனுடைய திட்டமானது வருகிறது.  தேவன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்க மறந்துவிட்டார் என்று கூட நான் சிந்திக்கக் கூடும்.  ஆனால் காலமானது எனக்குள் முதிர்ச்சியையும் என்னை தேவனுடைய திட்டத்திற்குள்ளும் கொண்டு வருகிறது.  காலம் வரும்போது அவருடைய திட்டம் தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. அவர் சொன்ன ஒவ்வொன்றையும் நிறைவேற்றுகிறார். குழந்தை வளர்ந்து விடுதலை தருபவராக மாறுகிறது. 

Prayer ஜெபம்:  ஆண்டவரே, நீர் அனைத்தையும் எனது நன்மைக்காகவும் உம் மகிமைக்காகவும் செய்ய நான் உம்மை நம்புகிறேன்.  உம் வாக்குத்தத்தத்தங்கள் அனைத்தும் நிச்சயமானவை. உம் வாக்குத்தத்தங்கள் அனைத்தும் முன்னமே எழுதப்பட்ட வரலாறு போன்றது ஆகும். ஆமென். 

No comments:

Post a Comment