Day 3 ஆதியாகமம் 6-8; லூக்கா 3
Scripture வேதவசனம்: லூக்கா 3:18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். 19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி
ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும்,
யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
Observation கவனித்தல்: இயேசு யோவானைப் பற்றி மிகவும் உயர்வாக சொன்னது: “ ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத்தேயு 11:11)
யோவானின் செய்தியானது “நற்ச்ய்தி” மற்றும் “கடிந்து கொள்ளுதல்” ஆகியவற்றின் கலவையாக இருந்தது. இயேசுவிடம் இருந்து யோவான் பெற்றப் பாராட்டைப் போல சபையானது பெற விரும்பினால், அது நற்செய்தியையும் கடிந்துகொள்ளுதலையும் ஆகிய இரண்டையும் பிரசங்கிக்க உண்மையுள்ளதாக இருக்க வேண்டும்.

Application பயன்பாடு: நான் கீழே விழுவதைத் தடுக்க எனக்கு எவராகிலும் உதவும்போது, நான் அவர்களின் கரிசனை மற்றும் உதவியை பாராட்டுகிறேன். வேகமாக வ்ருகிற கார் என் மீது மோதாமலிருக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்து என்னைத் தள்ளிவிடுபவர்களை நான் அதிகம் பாராட்டுகிறேன். வரப்போகிற ஆபத்தின் அளவைப் பொறுத்து என் பாராட்டும் இருக்கிறது.
Iபாவத்தின் பயங்கரம் மற்றும் அதின் விளைவுகள் எனக்கு தெரியாமல் போனால், கிருபையானது எனக்கு மதிப்பற்றதாகவும் தேவையற்றதாகவும் தோன்றும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, சத்தியத்தை மனவுண்மையுடன் சொல்ல எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment