Friday, January 8, 2016

அவருடைய வார்த்தை அதிகாரத்துடன் வருகிறது



 வாசிக்க : ஆதியாகமம் 9-11; லூக்கா 4

Scripture வேதவசனம்:  லூக்கா 4:32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்....
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

Observation கவனித்தல்: இஸ்ரேலில் போதிப்பவர்கள் அனேகர் இருந்தார்கள். மோசேயின் ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற ரபிகள் இருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தின் பொருள் மற்றும் நியாயப்பிரமாணத்தின் படி செய்ய வேண்டியவை என்ன என்பதைக் குறித்து அனேகம் எழுதியிருந்தனர். 

இயேசு அவர்களின் போதனையில் உள்ள மாய்மாலத்தை வெளிப்படுத்தி, ஜனங்களின் மேல் இருந்த பாரத்தை அகற்றினார். அவருடைய எளிமையான உவமைகள் மறுக்கமுடியாத கருத்துக்களை முன்வைத்தன. ஆனால் பேசுவதைக் காட்டிலும், இயேசு தம் பரமப் பிதா மக்கள் மீது கொண்டிருக்கும் கரிசனையை பிசாசுகளை துரத்துவதன் மூலமாகவும் அவர்களின் சரீரங்களை சுகமாக்கினதன் மூலமாகவும் வெளிப்படுத்தினார். 

சுகமாக்குதல் மற்றும் விடுதலை மூலமாக அவர் பிரசங்கித்த அதிகாரம் செயலில் வெளிப்படுத்தப்பட்டது.  ஜனங்கள் அந்த அதிகாரத்தைப் புரிந்துகொண்டனர்.

Application பயன்பாடு: தேவனுடைய வார்த்தையைப் பற்றிய என் போதனை அதிகாரமுள்ளதாக இருப்பதற்கு, அது காணக்கூடிய அதிகாரத்தை என் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும். அது என் செயல்களைப் பாதிக்க வேண்டும். அது என் வாழ்க்கையை பாதிக்கவில்லை எனில், அது மற்றவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று எப்படி ஒருவர் நினைக்க முடியும்?

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்க்கையில் உள்ள உம் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நான் உம்மை ஆண்டவரே என்று அழைக்கிறேன். என் வாழ்க்கையில் உள்ள உம் ஆளுகை மற்றவர்களாலும் காணத்தக்கதாக இருக்கட்டும். ஆமென்.

No comments:

Post a Comment