Saturday, January 9, 2016

தேவனோடு தனிமையில் செலவிடும் நேரம்



ஆதியாகமம் 12-14; Luke 5

வேதவசனம்: லூக்கா 5:15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16. அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

கவனித்தல்: தன் பிதாவுடன் தனித்து நேரம் செலவழிக்கும்படியாக மக்களிடம் இருந்து அடிக்கடி விலகிச் செல்லுமளவுக்கு இயேசுவுக்கு ஜெபம் மிக முக்கியமானதாக இருந்தது.  பிதாவின் சித்தத்தைச் செய்வது மிக முக்கியமானதாக இருந்தபடியால், இயேசு அடிக்கடி ஜெபத்தில் தன் நேரத்தைச் செலவழித்தார். தன் சீடர்களும் அதையே முன்னுரிமைப்படுத்டஹ் வேண்டும் என விரும்பினார். அவர் ஒரு மாதிரியை அவர்களுக்குக் காண்பித்தார். மேலும் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைக் கூட அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

Application பயன்பாடு: பாவமற்ற தேவகுமாரனாகிய இயேசு ஜெபிக்க நேரம் அவசியமாயிருந்தது எனில், நான் என் பரமப் பிதாவுடன் நேரம் செலவழிப்பது எவ்வளவு அதிக அவசியமானதாக இருக்கிறது. ஜெபம் அவரது முதல் விருப்பமாக இருந்ததெனில் எவ்வளவு அதிகமாக எனக்கும் அது முதலானதாக இருக்க வேண்டும். 

ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னுடன் நடந்து என்னுடன் பேசும். நீர் என்னை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை. நான் எதிர்கொள்கிற அனைத்தையும் நீர் சந்திக்கிறீர், கேட்கிற அனைத்தையும் நீர் கேட்கிறீர். ஆயினும் நான் உம்முடனே தனியே இருந்து உம் குரலை மட்டும் கேட்கக் கூடிய நேரம் உடையவனாக இருப்பது எனக்கு மிகவும் முக்கியமானது ஆகும். உம்முடனே கூட நான் இருக்கிற நேரம், மற்றவர்களுடன் கூட இருப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்துகிறது. ஆமென்.
         

No comments:

Post a Comment