Scripture வேதவசனம்:
1 சாமுவேல் 12:22 கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.
23. நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
23. நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
24. நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள்
முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர்
உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச்
சிந்தித்துப்பாருங்கள்.
25. நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
25. நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
Observation கவனித்தல்: சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேல் அபிசேகம் பண்ணுவித்தான். இப்பொழுதோ “ஓய்வு” பெற்று போக இருக்கிறார். இந்த வசனங்களில் அவர் மூன்று கருத்துச் செய்திகளை முன்வைக்கிறார். 1. தேவன் அவர்களை தெரிந்தெடுத்திருக்கிறார், அவர்களை அவர் புறந்தள்ள மாட்டார். 2. சாமுவேல் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபம் செய்து போதிப்பார். மேலும் 3. அவர்கள் எடுக்கும் முடிவே அவர்களின் முடிவை தீர்மானிக்கும்.
Application பயன்பாடு: நான் தேவனை நம்பமுடியும் என்பதை அறிந்திருக்கிறேன். மற்றவர்கள் எனக்காக ஜெபிப்பார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். என் முடிவுகள் என் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, சாமுவேலைப் போல, மற்றவர்களுக்காக ஜெபிப்பதில் உண்மைஉள்ளவனாக இருக்கவும், அவர்கள் வாழ்வில் உண்மையைச் பேசுவதற்கும் எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment