Scripture வேதவசனம்:
2 கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய்
விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என்
பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
10. அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
10. அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
Observation கவனித்தல்: சமீபத்தில் “மகிழ்ச்சி” என்ற வார்த்தையின் மீது என் கவனம் இருந்தது. வேதாகமத்தில் நாம் தேவனில் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பல காரணங்கள் நமக்கு இருக்கின்றன. மேற்கண்ட வசனத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமாக, நம் பலவீனங்களிலும், மற்றவர்கள் நம்மை முறையாக நடத்தாமல் இருக்கும் காலத்திலும் கூட மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்பொழுதுதான் நாம் வலிமையானவர்களாக இருக்கிறோம்.
Application பயன்பாடு: என் பலவீனமானது தேவன் தம் கிரியை என்னில் நடப்பித்து அவர் மட்டுமே மகிமை பெறுகிற ஒரு வாய்ப்பாக இருக்கிறது. என் பலவீனம் மற்றும் குறைவில் தேவன் செய்வதை மக்கள் காணும்போது, அவர்கள் இது தேவனுடைய செயல் என எளிதில் கண்டுகொள்கிறார்கள். தேவனுக்கு மகிமை செலுத்த அவர்கள் என்னுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.
Prayer ஜெபம்:
பரிசுத்த ஆவியானவரே, என்னை பயன்படுத்துவதற்காக நன்றி. நீர் விரும்புகிறவண்ணமாக என்னைப் பயன்படுத்த நான் விருப்பமுள்ளவனாக இருக்கட்டும். நான் பிரச்சனையில் பின்வாங்கிப் போகாமல், விசுவாசத்தில் முன்னேறிச்செல்லவும் நீர் மட்டுமே செய்யக் கூடியவைகளை செய்வீர் என எதிர்பார்த்து வாழவும் உதவும். ஆமென்.
No comments:
Post a Comment