Scripture வேதவசனம்:
1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
2 கொரிந்தியர் 13:4 ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய
வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள்
பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால்
அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
Observation கவனித்தல்: யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் (இரண்டுபேர் மட்டும்தான்) ஒரு மலையில் ஏறி பெலிஸ்தியர்களுடன் போரிடச் சென்று அவர்களில் 20 பேரைக் கொன்றனர். தேவன் கொஞ்சம் பேரைக் கொண்டு பெலிஸ்தியர் நடுவில் பயம் பரவச் செய்து வெற்றி பெறச் செய்தார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டவராகக் காணப்பட்டார். ஆனால் அவர் வல்லமையில் உயிர்த்தெழுந்து, இப்பொழுதும் அந்த அற்புதமான வல்லமையில் உயிரோடு இருக்கிறார்.
Application பயன்பாடு: என் பலவீனம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆணால் பரிசுத்த ஆவியான்வரால் என் வாழ்க்கை இயேசுவில் வல்லமையான வாழ்க்கைக்குரியதாக இருக்கிறது. என் வாழ்வின் நோக்கம் என்னவெனில், மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவரை நான் அனுமதிப்பதன் மூலம் தேவனை மகிமைப்படுத்துவது ஆகும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என்னை பயன்படுத்தும். மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில், நான் உம் பிரசன்னத்தையும் வல்லமையையும் சார்ந்திருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment