Wednesday, April 13, 2016

முடிந்தால் மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல

Scripture வேதவசனம்:  1 சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
 
Observation கவனித்தல்: அமலேக்கியர்களை ஒருவர் விடாமல் முற்றிலும் அழிக்கும்படி கர்த்தர் சவுல் ராஜாவிற்கு கட்டளையிட்டிருந்தார். ஆனால் அவன் இராஜாவையும், அனேக ஆடுகளையும் விட்டு வைத்திருந்தான். சாமுவேல் அவனை எதிர்த்தபோது, படைவீரர்கள் ஆடுகளில் சிறந்தவைகளை கர்த்தருக்குப் பலியாக செலுத்தும்படி விட்டுவைத்ததாக அவன் சாக்குபோக்கு சொன்னான். இரண்டு காரியங்களை நாம் இங்கு கவனிக்க வேண்டும். முதலாவதாக,  சவுல் ராஜா தன் கீழ்ப்படியாமைக்கு பொறுப்பு ஏற்காமல், மற்றவர்கள் மேல் அந்தப் பழியைப் போடுகிறான்.  இரண்டாவதாக, சில உயர்ந்த நோக்கங்களைக் கூறி கீழ்ப்படியாமை சரிதான் என்று நியாயம் கற்பிக்கிறான். 
தலைவர்கள் எப்பொழுதுமே யாரையாவது குறைகூறுவதற்கு தயங்குவதில்லை. தாங்கள் செய்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன என்று கூறி அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.
 
Application பயன்பாடு: நான் என் செயல்களுக்கும், என் அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களுக்கும் பொறுப்பேற்க உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். தேவனை விட சிறந்த கருத்துடையவனாக நான் இருக்க முடியாது என்பதை நான் எப்பொழுதும் ஒப்புக் கொள்ள வேண்டும். கீழ்ப்படியாமை என்பது தேவனுடைய வழிநடத்துதல்கள் தெளிவாக இருக்கும்போது மட்டுமே செய்யக் கூடிய ஒன்று அல்ல. 

Prayer ஜெபம்:   பரமப் பிதாவே, நான் உமக்குக் கீழ்ப்படிய உம்மை நம்புகிறேன்.  நான் உம் அறிவையும் ஞானத்தையும் நம்புகிறேன். நீர் என்னுடன் பேசுவீர், என் மூலமாக செயல்படுவீர் என்று நான் நம்புகிறேன். நீர் என்மேல் கொண்டிருக்கிற அன்பை நான் நம்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment