Thursday, April 14, 2016

யுத்தத்தை வரையறுத்தல் மூலமாக ஆரம்பித்தல்


Scripture வேதவசனம்:  1Samuel (NIV) அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
37. பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.
 
Observation கவனித்தல்:  மற்றவர்கள் பார்த்தது போல யுத்தத்தை  தாவீது பார்க்கவில்லை.  பெரும்பாலானோர் அதை பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்குமான ஒரு சண்டையாகவே பார்த்தனர். 9 அடி உயரமுள்ள இரட்சத கோலியாத், அதை தனக்கும் இஸ்ரவேலில் இருந்து வரும் ஒரு போர்வீரனுக்குமான யுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பினான். தாவீது அது உண்மையில் கோலியாத்துக்கும் ஜீவனுள்ள தேவனுக்குமிடையேயான யுத்தம் எனக் கண்டார்.  இது பெலிஸ்தியர்களுக்கு எதிராக இஸ்ரவேலர்கள் அணிவகுத்து நின்றதைக் காட்டிலும் அதிகமானதாகும். யார் போரில் வெற்றிபெறுவார் என்பதில் தாவீதுக்கு சந்தேகமே இல்லை. அவன் நல்ல ஒரு ஆயுத்த்தைத் தேட வேண்டிய அவசியம் இருக்கவில்லை, அவனுடைய கையில் இருந்த கவண் நன்றாக வேலை செய்யும். 
 
Application பயன்பாடு: நான் பிரச்சனையில் இருப்பதாக என்னைக் காணும்போது,  யார் இதில் இருக்கிறார்கள் என்று அடையாளம் காண்பது அவசியம்.  நான் தேவனுடைய சார்பில் இருக்கிறேன் என்று தைரியமாக அறிவிப்பது  அவசியமான ஒன்று. தாவீதைப் போல, என்னிடம் இருப்பவைகளை நான் பயன்படுத்தவும், தேவன் மற்றவைகளைப் பார்த்துக்கொள்வார் என அவரை நம்புவதும் தேவையானதாக இருக்கிறது. கர்த்தர் என்னுடன் இருந்தால், எனக்கு அதிக பணம் கிடைக்கிற வரைக்கும், அதிக சாதனங்கள் கிடைக்கிற வரைக்கும் நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே, என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதல்ல, அல்லது எவ்வளவு சிறப்பாக நான் திட்டமிடுகிறேன் என்பதல்ல முக்கியம். நான் உம் பக்கத்தில் இருந்து, உம்மை நம்புகிறேன் என்பதே முக்கியம். ஆமென்.

No comments:

Post a Comment