Scripture வேதவசனம்:
1Samuel (NIV) 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள்
திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்
பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய்
ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
7. அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
8. அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,
9. அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

Observation கவனித்தல்: தன் அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் ஒருவரின் சாதனைகள் பற்றி எரிச்சலடைவது என்பது ஒரு தலைவர் செய்யும் தவறு ஆகும். அவர்களை உற்சாகப்படுத்துவதில் முதன்மையானவராக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களின் சாதனைகளை குறைவாக மதிப்பிட்டு, அவர்கள் முக்கியமானவர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்கின்றனர். தனக்குக் கீழ் இருப்பவர்கள் ஒரு நாளில் தன் வேலையை எடுத்துவிடுவார்களோ என்று பயம் கொள்கின்றனர்.
Application பயன்பாடு: மற்றவர்கள் மேல் அதிகாரம் செலுத்துவதற்குப் பதிலாக, அடுத்த தலைமுறை தலைவர்கள் உருவாகிறதற்கான விளைநிலமாக நான் இருப்பதைக் காணவேண்டும். அவர்களின் வெற்றியானது அவர்கள் உருவான இடத்தைக் குறித்த நற்சாட்சியைக் கூறும். எதிர்காலம் நல்லவர்களின் கரங்களில் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என் எண்ணங்கள் மற்றும் ஏக்கங்களை வருங்கால தலைவர்கள் மனதில் விதைக்க உதவும்.அவர்கள் ஊழியம் மூலமாக நீர் அதிக மகிமை அடைவீராக. ஆமென்.
No comments:
Post a Comment