Scripture வேதவசனம்: சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
Observation கவனித்தல்: தன்னைக் கொல்லத்தேடிய சவுலின் கைகளில் இருந்து தப்பிப்பதற்காக தாவீது ஓடி ஒளிந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் தேவனை விட்டு தூரம் போய்விடவில்லை. அவன் தேவனை துதிப்பதை அவனுடைய பிரச்சனைகள் தடுக்கவில்லை. தேவனைத் துதிக்கவேண்டும் என்ற விருப்பத்தை அவனுடைய பிரச்சனைகள் அதிகரிக்கச் செய்தது போலத் தோன்றுகிறது. கடினமான காலங்கள் வழியாகக் கடந்து போகும் மற்றவர்களுக்கு அவனுடைய துதி உற்சாகம் தருவதாக இருக்கிறது. கர்த்தரை மகிமைப்படுத்துவதில் அவனுடனே கூட சேர்ந்துகொள்ளும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறான். அவனுக்காக யாரோ ஒருவர் இதை செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், அவனுடன் சேர்ந்து பண்ணும்படி அழைப்பு விடுக்கிறான், “என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.”
Application பயன்பாடு : என் வாழ்க்கையின் அடையாளமாக துதியானது இருக்கட்டும். என் மாதிரியின் மூலமாகவும் என் அழைப்பின் மூலமாகவும், மற்றவர்கள் தேவனுக்கு துதி செலுத்த என்னுடன் சேர்ந்து கொள்ளட்டும்.
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, நீர் எப்போதும் துதிக்குப் பாத்திரர். நான் பிரச்சனைகளுடன் இருக்கும்போதும், நான் உம்மை துதிக்க விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment