Wednesday, April 10, 2019

அது என் பாக்கியம்!



வேத வசனம்: 1 சாமுவேல் 12:20
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.

கவனிப்பு: சாமுவேல் சவுலை ராஜாவாக்கி தலைமைத்துவத்தில் இருந்து விலகிக் கொண்டார். தேவன் தங்கள் ராஜாவாக இருப்பதை அவர்கள் நிராகரித்து, மற்ற தேசத்தவர் போல ஒரு ராஜாவை விரும்பினர். சாமுவேல் அவர்கள் கோரிக்கை சரியல்ல என்று கூறி அதை தடுத்து நிறுத்த முயன்றார், ஆனால் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர், ஆகவே தேவன் சவுலை அவர்களுடைய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். "
கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” என்று சாமுவேல் அவர்களை எச்சரித்தார்..
தேவனை சேவிப்பது என்பது, அவர் சேவை செய்ய விரும்பும் வழியில் சேவிப்பதாகும். தேவனை பிரியப்படுத்த, என் சேவை என் இதயத்திலிருந்து வர வேண்டும். இது புறம்பான செயல்கள் சார்ந்தது அல்ல; இது இருதயம் சார்ந்த ஒரு விஷயம்.

விண்ணப்பம்: எவரும் ஒருவர் தங்கள் பின்னால் சென்று, அவர்களுக்கு சேவை செய்வது எவ்வளவு கொடூரமானது என்று புகார் செய்கிறவரை விரும்புவதில்லை.

புதிய ஏற்பாட்டு விசுவாசியாய், "கர்த்தரை முழு இருதயத்தோடும் சேவிப்பது" என்பது புரிந்துகொள்ள எளிதாக இருக்க வேண்டும். கர்த்தருக்கு ஏதேனும் செய்து விட்டு, பிறகு குறை கூறுவது மதியீனமானது ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என் இதயத்தில் வாழ்கிறார். அவர் என் எண்ணங்களை அறிந்திருக்கிறார். சந்தேகமில்லாமல், சந்தோஷமான, முழு இருதயத்தோடு சேவை செய்ய தேவன் தகுதியுள்ளவர்!
 
ஜெபம்: கர்த்தாவே, உமக்கு ஊழியம் செய்வது மிகவும் பாக்கியமானது என்பதை நான் அறிய விரும்புகிறேன். நான் உங்களுக்கு சேவை செய்வது என் பாக்கியம் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆமென்




SOAP #3416:  1Samuel 11-12; 1Chronicales 1; 2Corinthians 11
It’s My Pleasure!
 
Scripture:  1Samuel (NIV) 12:20 "Do not be afraid," Samuel replied. "You have done all this evil; yet do not turn away from the LORD but serve the LORD with all your heart.

Observation:   Samuel had presented Saul as king and now he was stepping out of leadership.  They had rejected the idea of God being their king and wanted a king as the other nations.  Samuel had tried to discourage them, but they insisted, and God chose Saul to be their king.  Samuel admonished them “not to turn away from the LORD but serve the LORD with all your heart.”

Serving God should mean that I serve God the way He likes to be served.  To please God, my service must come from my heart.  It is not just outward actions; it is a heart matter. 

Application:   No one like to be served by someone who goes behind their back and complains about how terrible it is to serve them. 

As a New Testament believer, “serving the LORD with all my heart” should be easy to understand.  To do something for the Lord, then complain about it under my breath is foolish.  After all, He lives in my heart.  He knows my thoughts.  Without a doubt, God is worthy of joyous, willing, whole-hearted service! 
 
Prayer:  Lord, I want you to know that it is my pleasure to serve you.  And I want others to know that it is my pleasure to serve you. Amen

No comments:

Post a Comment