வாசிக்க: 1 சாமுவேல் 8-10; 2 கொரிந்தியர் 10
வேதவசனம்: 2 கொரிந்தியர் 10: 17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். 18. தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
கவனிப்பு: ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் குறிப்பிடத்தக்க நபராக கருதுபவர் அவன் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை உடையவன் என்று கருதும் போது, அம்மனிதனும் தன்னை வெற்றியாளராக கருதுகிறான் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆகவே, தேவனை நம் வாழ்வில் உரிய இடத்தில் வைப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் காண முடியும் - அவர் மிகவும் முக்கியமான நபர்! தேவன் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பது மற்ற எவருடைய கருத்தையும் விட மிகவும் முக்கியமானது.
பயன்பாடு: நான் ஒரு சிலருடைய வாழ்க்கையில் முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதை நான் தவற விட்டுவிடக் கூடாது. நான் அவர்களிடம், அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கக் கூடும். நல்ல ஒரு பாதிப்பை உண்டாக்கவே தேவன் என்னை அவர்களுடைய வாழ்வில் வைத்திருக்கிறார். நான் தேவனுடைய வார்த்தைகளை அவர்களிடத்தில் சொல்ல வேண்டும். தேவன் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை நான் அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் என்னைச் சார்ந்திருக்காமல், தேவனைச் சார்ந்திருக்கச் செய்ய வேண்டும். நான் என்னைத் தாழ்த்தி அவரை உயர்த்தி முன்னிறுத்த வேண்டும். யோவான் சொன்னது போல (3:30), நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்.
ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, தேவன் என்னைக் கொண்டு வைத்திருக்கிற நோக்கத்திற்கு ஏற்றவாறு வாழ என்னை வழிநடத்தும். ஜனங்களை உம்மிடம் கொண்டுவரும்படி நான் என் சக்தியைப் பயன்படுத்த உதவும். ஆமென்.
Scripture:
2Corinthians (NIV) 10:17 But, "Let him who boasts boast in the Lord."
18 For it is not the one who commends himself who is approved, but the
one whom the Lord commends.
Observation:
I have heard it said that a man considers himself successful when the
significant people in his life consider him successful. So, we can see
how important it is for us to raise God to His appropriate level in our
lives—THE MOST SIGNIFICANT PERSON! What He says about us is more
important than what anyone else says about us, no matter how important
they seem in this life!
Application:
I cannot miss this application: there are people to whom I am a
significant person. What I say to them, and about them, can affect
their lives. God has placed me in their lives to have a good effect on
them. I need to be saying God’s words to them. I need to tell them
what God thinks about them. I need to be taking their emphasis on me
and placing it on HIM! I need to be moving into the background as HE
moves to the foreground! Like John (3:30) said, “He must increase, but
I must decrease.”
Prayer: Holy Spirit, guide me in being true to God’s purpose for me. Use my influence to bring people closer to you. Amen
No comments:
Post a Comment