Saturday, April 13, 2019

தேவனுடைய வல்லமையால் வாழ்கிறோம்

வாசிக்க: 1 சாமுவேல் 14; 1 நாளாகமம் 4; 2 கொரிந்தியர் 13

 வேதவசனம்: 2 கொரிந்தியர் 13: 4
ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.

கவனிப்பு: இயேசு சிலுவை மரணத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். அது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன மற்றும் நியாயப்பிரமாண நிறைவேறுதலாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் பரிபூரணமாக செய்து முடித்தார்! அவர் மீண்டும் போராடவில்லை; அவர் எதிர்க்கவில்லை. அவர் தன்னை பலவீனப்படுத்தி, உலகின் பாவங்களை தன் மேல் வைக்கும்படி அனுமதித்து, ஒரு பாவியைப் போல  நாம் மரிக்கவேண்டிய இடத்தில் அவர் தன் உயிரைக் கொடுத்தார். ஆனாலும் அவர் மரித்தபின் மரித்தோரிலிருந்து உயிரோடே எழுந்தார். சமீபத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த ஒருவராக அவர் சீடர்களுக்குத் தோன்றவில்லை! அவர் ஒரு ஆரோக்கியமான, திடகாத்திரமான மனிதராக தோன்றினார். அவர் அவர்களைத் தொட்டார்; அவர் அவர்களுடனே சாப்பிட்டார்; ஆனால் பூட்டிய கதவுகள் வழியாக அவர் தோன்றினார், பின்பு பரமேறிச் சென்றார். உண்மையில் அவர் தேவனுடைய வல்லமையால் உயிரோடு இருந்தார். அவர் தேவனுடைய வல்லமையால் வாழ்கிறார்.

பயன்பாடு : நான் பலவீனமானவனக
தேவனுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவனாக இருக்கிறேன். நான் கிறிஸ்துவுடன் மரித்துவிட்டேன், இப்போது உயிர்த்தெழுப்பப்பட்ட அவருடைய உயிர்த்தெழுதலின் வாழ்வு எனக்கு கிடைக்கிறது! தேவனுடைய வாழ்க்கையின் நோக்கமானது நான் மற்றவர்களுக்காக சிறந்த ஊழியனாக இருக்க என்னை உருவாக்குகிறது. அது இயேசுவில் இருந்த "தேவனுடைய வல்லமையாக"  இருந்தது,  எனக்குள்ளும் இருக்கிற "தேவனுடைய வல்லமையாக"  அது இருக்க வேண்டும்.

ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மாம்சத்தில் நான் பலவீனமாயிருக்கிறேன். நான் உம்மைப் போல் வாழ வேண்டும், ஆனால் நான் அதை செய்ய முடியாது! நீர் மட்டுமே உம் வாழ்வை என்னுள் வாழலாம்!எனக்குள் நீர் வாழ நான் ஜெபிக்கிறேன். என் மூலமாக பேசும், தொடும். உம் மகிமைக்காக என்னைப் பயன்படும். ஆமென்


 SOAP #3418:  1Samuel 14; 1Chronicles 4; 2Corinthians 13
Living by God’s power
 Scripture:  2Corinthians (NIV) 13:4 For to be sure, he was crucified in weakness, yet he lives by God’s power. Likewise, we are weak in him, yet by God’s power we will live with him to serve you.

Observation:   Jesus submitted Himself to crucifixion.  It was the fulfillment of the Old Testament prophecies and law.  He fulfilled everything perfectly!  He did not fight back; He did not resist.  He made Himself weak and allowed the sins of the world to be placed upon Him and died in our place as a sinner would die!   Oh, BUT WHEN HE ROSE—He rose from the dead in power.  He did not appear to the disciples as someone who had been recently crucified!  He appeared as a healthy, well-fit man.  He had them touch him; he ate with them; but he appeared through locked doors and rose into the heavens.  Truly he had come alive by God’s power.  He lives by God’s power.

Application:    I am weak and unable to accomplish what God desires.  I died with Christ, and now have His resurrected life living in me!   The purpose of God’s life within me is to make me a better servant for others.  It was “God’s power” in Jesus, and it must be “God’s power” in me.

Prayer:  Lord Jesus, in my flesh I consider myself weak.  I am to live like you, yet I cannot do it!  Only you can live your life!  Live your life in me, I pray.  Speak through me, touch through me, use me for your glory.  Amen

 

No comments:

Post a Comment