Sunday, April 14, 2019

யுத்தத்திற்கு ஆயத்தம்


வாசிக்க:1 சாமுவேல் 17; சங்கீதம் 9; மத்தேயு 2

 
Scripture:  1Samuel (NIV) 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். 38. சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். 39. அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, 40. தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.

கவனிப்பு:  இராட்சத கோலியாத்துக்கும், இந்த இளம் வாலிபனுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை சவுல் ராஜாவால் வெளிப்படையாகக் காண முடிந்தது. தாவீது எல்லா வாய்ப்புகளையும் உடையவனாக இருக்க வேண்டும் என அவன் விரும்பினான். ஆகவே, தன் ஆயுதங்களடங்கிய ஆடையை அவனுக்கு அணியக் கொடுத்தான். சவுல் இராஜாவால் செய்யக் கூடியதெல்லாம் அது மட்டுமே. தாவீது அதை அணிந்து சவுலின் கூடாரத்திற்குள் நடந்து பார்த்தான். ஆனால் ராஜாவில் ஆயுதமோ அணிகலனோ தனக்கு உதவியாக இருக்கப் போவதில்லை என்பதை வெகுசீக்கிரத்தில் கண்டுகொண்டான்.  அவன் தனக்கு வசதியாக இருப்பதி, கடந்த காலத்தில் பயன்படுத்திப் பழகினதை, தனக்கு நன்கு தெரிந்ததை பயன்படுத்த விரும்பினான். மேலும் அவனுடைய விசுவாசமானது கர்த்தரின் மேல் இருந்தது.

பயன்பாடு: நாம் ஆவிக்குரிய யுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும்போது, அதை எதிர்கொள்ள இந்த உலகம் அனேக காரியங்களைத் தரலாம். அனேக மருத்துவர்கள், ஆலோசனையாளர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், குழு கூட்டங்கள், செயல் முறைகள் மற்றும் பயிற்சிகள் உண்டு. சவுலின் ஆயுதங்களைப் போன்று, அவை நன்குப் பயிற்சி பெற்ற சவுலின் கைகளில் பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் தாவீதைப் போன்ற நமக்கு நாமறிந்ததை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆவிக்குரிய ஆயுதங்கள் என்பது ஜெபம், தேவனுடைய வார்த்தை, விசுவாசம், ஆராதனை, கீழ்ப்படிதல், அதிகாரத்துடன் பேசுதல், பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் என பலவற்றை உள்ளடக்கியது ஆகும். நான் இராட்சதர்களுடன் போரிட ஆயத்தப்படும்படி, இவ்வாயுதங்களை சிறு போர்களில் பயன்படுத்த வேண்டும்.  
 
ஜெபம்: பரிசுத்த ஆவியே, நான் வெற்றி பெற ஆயுதம் எனக்களித்திருக்கிறீர். என் வாழ்வில் அனுதினமும் வருகிற போராட்டங்களில் நீர் தந்திருக்கிற ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்த எனக்குதவும். அப்போதுதான் நான் இராட்சதரை எதிர்கொள்ளும்போது, எனக்குத் தேவையான ஆயுதங்களை உடையவனாக இருப்பேன். ஆமென்.
 

Prepared for Battle
 
Scripture:  1Samuel (NIV) 17:37 [David speaking to King Saul before fighting Goliath] The LORD who delivered me from the paw of the lion and the paw of the bear will deliver me from the hand of this Philistine." Saul said to David, "Go, and the LORD be with you." 38 Then Saul dressed David in his own tunic. He put a coat of armor on him and a bronze helmet on his head. 39 David fastened on his sword over the tunic and tried walking around, because he was not used to them. "I cannot go in these," he said to Saul, "because I am not used to them." So, he took them off. 40 Then he took his staff in his hand, chose five smooth stones from the stream, put them in the pouch of his shepherd’s bag and, with his sling in his hand, approached the Philistine.

Observation:  King Saul obviously saw the difference between the giant and this young shepherd boy.  He wanted David to have all the opportunity possible, so he dressed David in his own armor.  It was the only thing King Saul could do.  David tried a few moves in King Saul’s tent, but quickly realized that the king’s tunic, armor, helmet, and sword were not going to help him.  He would use what he was comfortable with, what he had used in the past, what he knew.  AND his faith was in the Lord! 

Application:  When we face spiritual battles today, the world has many things to give us for the battle.  There are doctors and counselors, drugs and therapies, group meetings, thought processes, exercises, etc.  Like Saul’s weapons, they may be useful in Saul’s trained and skilled hands, but we, like David, are only able to use what we know.  Spiritual weapons include prayer, the Word, faith, worship, obedience, speaking with authority, the gifts of the Holy Spirit, etc.  I need to use these weapons in the little battles to prepare me to fight the giants. 
 
Prayer:  Holy Spirit, you have weaponized me for victory!  Help me use the spiritual weapons you have given me to fight the everyday battles that come my way.  Then, when I face the giant, I will not find myself lacking the weapons with which to fight. Amen

No comments:

Post a Comment