Tuesday, April 16, 2019

என்ன ஒரு பிணைப்பு!

வாசிக்க: 1 சாமுவேல் 19; 1 நாளாகமம் 7; சங்கீதம் 59; மத்தேயு 4

வேதவசனம்: சங்கீதம் 59: 16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

கவனித்தல்: வல்லமை மற்றும் அன்பு - இவ்விரண்டும் தேவனுடைய சிறப்பியல்புகள் ஆகும். வல்லமையானது தேவனுடைய தன்மையில் ஒன்றாக இருக்கிறது. அவர் ஆவியான்வர், நித்தியமானவர் மற்றும் திரியேக தேவன். அவர் சர்வ வல்லவர், சர்வ ஞானி (எல்லாம் அறிந்தவர்), சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்). தேவனுடைய ஒழுக்க தன்மையின் பகுதியாக அன்பு விளங்குகிறது. அவர் அன்பானவர்; அவர் பரிசுத்தமானவர். மற்ற எல்லா ஒழுக்க இயல்புகளும் தேவனுடைய அன்பு மற்றும் பரிசுத்தத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.

பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால், தாவீது வல்லமை மற்றும் அன்பு என்கிற தேவனுடைய இவ்விரு சிறப்பியல்புக்ளை பிணைத்து எழுதி இருக்கிறார். இந்த உலகில் மிகவும் வல்லமையுள்ள மிகவும் அன்பானவர் என்பதை அறிந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

பயன்பாடு:  அவருடைய அன்பு என்னை வந்துச் சேர்வதைத் தடுக்குமளவுக்கு வல்லமையுள்ளது என எதுவும் இல்லை. தேவன் என்னை அன்பு செய்து, புயல் வேளைகளில் நான் உறுதியாக இருக்கும்படி அவருடைய வல்லமையால் என்னைத் தாங்குகிறார். அன்பினால், என்னை விடுவிக்கவும், எடுத்து நிலை நிறுத்தவும் அவர் தம் வல்லமையை பயன்படுத்துகிறார்.

ஜெபம்:  பரலோக தகப்பனே, நான் உம் அன்பை முற்றிலும் நம்ப முடியும். நீர் என்னை தொட முடியும். பாவம் மற்றும் கலக்கத்திலிருந்து என்னை உம்மால் விடுவிக்க முடியும். என்னை உம்முடனேகூட உன்னதங்களில் உட்கார வைக்கவும் உம்மால் ஆகும். நான் உம் வல்லமையையும், அன்பையும் பாடுவேன். ஆமென்.


SOAP #3422:  1Samuel 19; 1Chronicles 7; Psalm 59; Matthew 4
What A Combination!
 
Scripture:  Psalm (NIV) 59:16 But I will sing of your strength, in the morning I will sing of your love; for you are my fortress, my refuge in times of trouble. 17 O my Strength, I sing praise to you; you, O God, are my fortress, my loving God.

Observation:  Strength and love—two character traits of God.  Strength is a part of God’s natural being.  He is spirit, eternal, and triune.  He is all powerful (omnipotent), all knowing (omniscient), and all present (omnipresent).  Love is part of God’s moral nature.  He is Love; He is Holy.  All other moral characteristics are expressions of God’s love and holiness. 

Under the inspiration of the Holy Spirit, David in these verses combines two of God’s character traits:  strength and love.  It is great to know that the most powerful being in the universe is also the most loving!  

Application:  There is nothing powerful enough to prevent His love from reaching me!   God loves me and uses His power to hold me steady in the storm.  In love, He uses His power to deliver and restore me.
 
Prayer:  Heavenly Father, I can truly rest in your love.  You are able to reach me.  You are able to lift me out of sin and despair.  You are able to set me in heavenly places with you.  I will sing of your strength; I will sing of your love! Amen

No comments:

Post a Comment