Monday, April 8, 2019

அது கவரக் கூடியதாக இருக்கிறது!

 SOAP # 3414: 1 சாமுவேல் 6-7; சங்கீதம் 72; 2 கொரிந்தியர் 9

 வேதவசனம்: 2 கொரிந்தியர் 9:2 உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.

 கவனிப்பு: ஒரு சபை முழுவதும் தாராள குணம் படைத்த ஒரு ஆவி காணப்படுவது என்ன ஆசீர்வாதம். பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்ட ஒருவர் முன்வைக்கப்பட்டுள்ள தேவைக்குத் தேவையானவைகளைத் தருகிறார். அவர்களின் கொடுத்தல் மற்ற சகோதரர் அல்லது சகோதரிகளிடம் கொடுக்கவேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கிறது.  ஒருவேளை அது முதலில் கொடுப்பவரின் தியாகமாக இருக்காலாம். ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு சொல்லியிருக்கலாம், ஆனால் தாராள மனதானது இரண்டாவதாக கொடுப்பவரிடம் இருந்து பற்றி எரிய துவங்குகிறது. பின்னர் மூன்றாவதாக அடுத்த நபர் கொடுக்கிறார். தேவன் அவர்களுக்கு மிகுதியாக அளித்திருக்கிறார், எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள் என்று சிலர் உணர்கிறார்கள். வேறு சிலர் மகிழ்ச்சியான தியாகத்தைச் செய்து, தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு பகுதியாக இருப்பதற்காக மகிழ்வார்கள். அவர்களுக்கு தேவை வரும்போது தேவன் தனித்துவமான முறையில் அதை சந்திப்பார் என்று அறிந்திருக்கிறார்கள்.

பயன்பாடு: ஆவியின் அபிஷேகம் செய்யப்பட்ட தாராளமான மனதுடையவர்களாக இருப்பது என்பது எவ்வளவு சிறப்பு! கடவுள் என்னைப் பயன்படுத்தினார் என்பதை அறிவதில் என்ன மகிழ்ச்சி! 

ஆவியானவர் கொடுக்க ஏவின படி கொடுத்து சரீரமானது தன் அவயவங்கள் ஒவ்வொன்றின் தேவைக்கும் தேவையானதை அளிக்கிறது.

அத்தகைய கொடுத்தல் பற்றிய சாட்சிகள் எவ்வளவு சிறப்புமிக்கவை.  தேவைப்பட்டவர்கள் பெற்றுக் கொண்ட சாட்சிகள் உள்ளன. கொடுத்தவர்களின் சாட்சிகளும் உள்ளன. தேவன் அவர்களுடைய பொருளாதாரத்தை ஆசீர்வதிக்கிறார். தேவன் ஒரு விசேஷ ஆசீர்வாதத்தை வழங்கினார்; அவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய ஒன்றை தேவன் செய்தார். நாட்கணக்காக, மாதக்கணக்காக சொல்வதற்கு இது போன்ற சாட்சிகள் ஏராளம் உள்ளன.  


ஜெபம்: பரலோகத் தகப்பனே, நீர் எல்லோருக்கும் மிகுந்த கொடுப்பவர்! உம் பிள்ளைகளாய் நாங்களும் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர். நான் கொடுக்கும்போது நான் உம்மைப் போல் செயல்படுகிறேன். கொடுத்தல் என் இதயத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது. உம் இருதயத்திற்கும் அது மகிழ்ச்சியை தருவதாக. ஆமென்







SOAP #3414:  1Samuel 6-7; Psalm 72; 2Corinthians 9
Its catching!
 
Scripture:  2Corinthians (NIV) 9:2 For I know your eagerness to help, and I have been boasting about it to the Macedonians, telling them that since last year you in Achaia were ready to give; and your enthusiasm has stirred most of them to action.

Observation:   What a blessing to see a spirit of generosity sweep across a congregation.  Someone moved by the Holy Spirit steps up to give to a need that has been presented.  Something in their giving stirs the spirit in another brother or sister to give.  Maybe it was the sacrifice of the first giver.  Maybe it was something the Holy Spirit led them to say, but generosity is ignited in a second giver.  And then a third moves to give.  Some realize that God has provided an abundance for them, so they joyfully give.  Others make a joyful sacrifice, counting it a blessing to be a part of meeting the need.  They give, knowing that God will uniquely provide when their need arises. 

Application:    How special to be a part of Spirit-anointed generosity!   What rejoicing to know that God used me!   The body met the need as each member gave as the Spirit led them to give. 

And how special the testimonies that come out of such giving.  There are the testimonies of those whose need was met.  AND there are the testimonies of those who gave!  God replenished their finances; God provided a special supply; God arranged for a bill to be satisfied.  There are fresh testimonies that go on for months and months!  
 
Prayer:  Heavenly Father, you are the greatest Giver of all!  You desire your children to be givers too!  I am acting like you when I give.  Giving brings joy to my heart.  May my giving bring joy to your heart also.   Amen

No comments:

Post a Comment