Wednesday, December 30, 2020

கீழ்ப்படிய ஒரு அழைப்பு

வாசிக்க வேண்டிய வேதபகுதி : ஆகாய் 1-2

வேதவசனம்: ஆகாய் 1:5 ...உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்...

ஆகாய் 1:12 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.

கவனித்தல் : வேதாகமத்தில் சிறிய புத்தகங்களில் ஒன்றாக இருந்தாலும், ஆகாய் தீர்க்கதரிசன புத்தகம் பல துல்லியமான தகவல்களைத் தருகிறது. தேவனுடைய ஜனங்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்த்து, ஆராய்ந்து, முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுக்கும்படி இந்த புத்தகம் அழைப்பு விடுக்கிறது. உடனடிக் கீழ்ப்படிதலின் விளைவாக அனேக தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்டாவதை நாம் வாசித்தறிகிறோம். அவர்களுடைய கனியற்ற, ஏமாற்றம் மிகுந்த நாட்கள் தேவனுடைய உறுதியான வார்த்தைகளுடன் ஒரு முடிவுக்கு வருகிறது.

பயன்பாடு: நான் தோல்விகள், தாமதமான முடிவுகள், குறிப்பிட்ட காரியங்களுக்காக நீண்டகாலம் காத்திருத்தல் போன்றவைகளை எதிர்கொள்ள நேரிடும்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சுய பரிசோதனையே. நான் என் அழைப்புக்கேற்ற, தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்கிறேனா என்று அவ்வப்போது சுய-பரிசோதனை செய்து கொள்வது நல்லது. என் எதிரிகளுக்கு, அல்லது என்னை எதிர்க்கும் சூழ்நிலைகளுக்குப் பயப்படுவதற்குப் பதிலாக, நான் தேவனுக்கு பயந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் தேவனுக்குப் பயந்து, அவருக்கு உரிய இடத்தை என் வாழ்வில் கொடுக்கும்போது, என் வாழ்க்கை தேவனுடைய வாக்குத்தத்தங்களாலும், அதன் நிறைவேறுதல்களினாலும் நிரம்பி வழிவதைக் காண்பேன்.

ஜெபம்: பிதாவே, உம் ஊழியக்காரன் மூலமாக நீர் காண்பிக்கிற அடையாளத்திற்காக நன்றி. அது இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது. தாமதமின்றி கீழ்ப்படிய எனக்கு உதவும். உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் அதிகமாக என்னை வேறேதுவும் திருப்திப்படுத்த முடியாது. நான் எப்போதும் கீழ்ப்படிகிறவனா(ளா)க வாழ உம் பரிசுத்த ஆவியானவர் உதவுவாராக. ஆமென்.

No comments:

Post a Comment