வாசிக்க வேண்டிய வேத பகுதி: யூதா 1
வேதவசனம்: நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில்....
கவனித்தல்: இங்கு உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான சில முக்கியமான விஷயங்களை யூதா நிருப ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். தேவன் நமக்கு என்ன செய்தார் என்பதையும், நமது அழைப்பு என்ன என்பதையும் தோழமையுடன் நினைவுபடுத்துகிற அதே வேளையில், அவபக்தியானவர்களையும், அவர்கள் தேவனுக்கு விரோதமாக செய்த தவறான நடக்கைகளையும் எச்சரிப்பாக சுட்டிக்காட்டுகிறார். தேவனுக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்கிற, செய்தவர்கள் அடைந்த மற்றும் அடையப்போகிற தண்டனைகளைச் சொல்லி, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், நமக்காக என்ன காத்திருக்கிறது என்பதையும் யூதா நினைவுபடுத்துகிறார். நாம் தவறான மாதிரிகளை அல்லது மனிதர்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு, “விசுவாசத்திறாக போராட” தேவனை நோக்கி நம் கவனத்தை திருப்ப வேண்டும்.
பயன்பாடு: கிறிஸ்துவுக்குள் நான் யார் என்பதையும், தேவன் எனக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்வது நல்லது தான். ஆயினும், தேவன் கிருபையாக எனக்கு அளித்திருக்கிற நிலையில் நான் தொடர்ந்து நிலைத்திருக்க, கிருபையையும் விசுவாசத்தையும் தவறாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தேவனையே எப்பொழுதும் பார்க்கிறவனாகவும், மற்றவர்களுடன் தேவனிடம் இருந்து பெற்ற கிருபையையும் அன்பையும் பகிர்ந்து கொள்ள ஆயத்தமுடையவனாகவும் இருக்க வேண்டும்.
ஜெபம்: பிதாவே, உம் அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக நன்றி. தோழமையுடன் கூடிய நினைவுபடுத்தல்களுக்கும் எச்சரிப்புகளுக்காகவும் உமக்கு நன்றி. உம் கிருபையினால் மாத்திரமே நான் இன்று வரை உயிர்வாழ்கிறேன்! உம்மில் நான் நிலைத்திருக்க, உம்மையே நான் நாடுகிறேன். “ இங்கே நான் (உமது முன்பாக) நிற்கிறேன், வேறேதையும் என்னால் செய்ய இயலாது. ஆகவே தேவனே எனக்குதவும். ஆமென்.” (மார்ட்டின் லூத்தர்)
அற்புதராஜ்
9538328573
31/12/2020
No comments:
Post a Comment