Friday, January 8, 2021

தேவையில்லாத கவலை

வாசிக்க: ஜனவரி 02, 2021: ஆதியாகமம் 3-5; லூக்கா 2


வேதவசனம்: லூக்கா 2:43-45 பண்டிகை நாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.


கவனித்தல்: அவருடைய வார்த்தையில், பனிரெண்டு வயது சிறுவன் தன் பூமிக்குரிய தாயை நோக்கி பின்வருமாறு சொன்னதாக நான் கேட்கிறேன்: ”உங்களுக்கு தெரியாதா….?” அல்லது ”நான் எங்கே இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?”  ”என்னுடைய பிறப்பைக் குறித்து தேவ தூதன் சொன்னது நியாபகம் இல்லையா?  கிழக்கில் இருந்து வந்த மனிதர்களின் சந்திப்பு மற்றும் பரிசுகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆலயத்தில் வைத்து உங்களை சந்தித்த சிமியோன் மற்றும் அன்னாள் அவர்களை நியாபகம் இல்லையா? அம்மா, என்னை எங்கே கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தீர்கள்? 


மரியாளும், யோசேப்பும் தங்களுக்கு முன்னமே உரைத்ததை  நினைவு படுத்திருப்பார்கள் எனில், கவலை நிறைந்த  மூன்று நாட்களில் இருந்து  தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.


பயன்பாடு: பரிசுத்த ஆவியானவர் என்னை நோக்கி “ லியான், என்னிடத்தில் நீ என்ன எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய்?  நான் உனக்கு சொன்னது நியாபகம் இல்லையா?  நான் உனக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்று எதிர்பார்த்தாயா?  என்று சொல்வதை நான் கேட்கிறேன்..


ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, பிதாவாகிய தேவனை அறிந்து கொள்ளவும், அவர் எனக்கு உதவி செய்தால், நான் தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பதையும் அறிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். அவர் இயேசுவை அனுப்பினார்! அவர் எனக்கு பரிசுத்த வேதாகமத்தை தந்தார்! பரிசுத்த ஆவியே, எனக்குள் நீர் வாழவும், என் மூலமாக கிரியை செய்யவும் உம்மை அவர் அனுப்பி இருக்கிறார். ஆமென்.                             


No comments:

Post a Comment